News

முதன்முறையாக இஸ்ரேலை நேரடியாக தாக்கிய ஈரான், பதிலடி கொடுத்த இஸ்ரேல்: பதற வைக்கும் வீடியோ.

முதன்முறையாக சிரியாவின் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.10 மணியளவில் ஈரான் இஸ்ரேல் மீது 20 ராக்கெட்களை ஏவியது, பதிலுக்கு இஸ்ரேல் விமானங்கள் டமாஸ்கஸ் மீது குண்டு மழை பொழிந்தன. ராக்கெட்களும் அவைகளைத் தாக்கி அழிக்கும் Iron Dome rocket defense system மூலம் வீசப்படும் குண்டுகளும் சரமாரியாகப் பாயும் வீடியோ காட்சிகள் காண்போர் மனதை பதை பதைக்கச் செய்கின்றன.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானிய ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய கோபத்தில் இருக்கும் ஈரான் இஸ்ரேலை வம்புக்கிழுத்துள்ளது.
சிரியாவில் தனது படைகளை குவித்து வைத்துள்ள ஈரான் நள்ளிரவு தனது வேலையைக் காட்டத் தொடங்கியது, சுமார் 20 ராக்கெட்களை அது சிரியாவிலிருந்து இஸ்ரேல் மீது ஏவியது. அந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையென்றும், குறைந்தபட்ச சேதமே ஏற்பட்டதாகவும் கூறிய இஸ்ரேல் பயங்கரமான பதிலடியைக் கொடுத்தது.

ஈரானிய படைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிரிய நகரமான Quneitraவை குண்டுகளால் துவம்சம் செய்த இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், பின்னர் டமாஸ்கஸ் மீது விமானப் படை மூலம் குண்டு மழை பொழிந்தன. பொதுவாக லெபனானின் Hezbollah போன்ற போராளிக் குழுக்கள் மூலமே தாக்குதல் நடத்தும் ஈரான் இம்முறை தானே நேரடியாக தாக்குதலில் இறங்கியுள்ளது.

ஈரானிய படைகள் 20 ராக்கெட்களை ஏவியதாகக் கூறிய இஸ்ரேல், அவற்றில் பெரும்பாலானவற்றை தாக்கி அழித்ததாகத் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து இஸ்ரேல் விமானங்கள் சிரியாவில் ஈரானியப் படைகள் இருக்கும் இடங்களாகப் பார்த்து குண்டு மழை பொழிந்தன.நேற்றிரவு நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதல்களால் உலக நாடுகள் போர் மூளுமோ என்கிற அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top