News

முள்ளிவாய்க்காலில் ஒன்பது ஆண்டுகளாய் கதறி அழும் தந்தை: பார்த்தவர்கள் கூட விம்மி அழுத சோகம்……

தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் வாகனப்பேரணியாக சென்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டதுடன், வடக்கின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான பிரதான நினைவுச்சுடரை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எடுத்துக்கொடுக்க இறுதிப்போரில் தனது தாய் தந்தையை இழந்த யுவதி ஒருவர் சுடர் ஏற்றினார். இதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சுடர்களை உறவுகளை இழந்தவர்கள் ஏற்றி வைத்திருந்தனர்.

உறவுகளை இழந்தவர்கள், கண்ணீர் விட்டும், கதறியும், முள்ளிவாய்க்கால் மண்ணில் அழுது புரண்டு தமது ஆற்ற முடியா துயரை வெளிப்படுத்தினர். இதன்போது அங்கு ஒன்றுத்திரண்டிருந்தவர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது தனது மகனை இழந்த தந்தையொருவரின் கூக்குரல். தனது பிள்ளையை எண்ணி அவர் கதறி அழுதபோது அங்கிருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து அவர் துயரில் பங்கெடுத்ததுடன், அவரை எண்ணி அனைவரும் அழுதுள்ளனர்.

இறுதி யுத்தத்தில் தனது பிள்ளையை இழந்த குறித்த தந்தை 9 வருட காலமாக மீளாத்துயரில் இருப்பதுடன், தனது பிள்ளையை எண்ணி ஒவ்வொரு கணமும் துடிப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவர் கதறி அழுத அந்த நிமிடம் அங்குள்ளவர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்ததுடன், இரத்தத்தில் குளித்த முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நனைந்த தருணமாக அது பார்க்கப்பட்டது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top