முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் அரசியல்வாதிகளை சம்மந்தப்படுத்த நாம் விரும்பவில்லை

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மே-18 அன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முள்ளிவாய்க்கால் சென்று அஞ்சலி செலுத்தவுள்ள நிலையில் வடக்கில் காணாமல் போனவர்களின் உறவுகளும் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
எனவே தமது அஞ்சலி நிகழ்வு அரசியல் களப்படம் இன்றி இடம் பெற உரிய பங்களிப்பை வழங்குமாறு மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி மனுவல் உதையச்சந்திரா தெரிவித்தார்.
அவர் இன்று (6) ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவுக்காக நாங்கள் மன்னார் மாவட்டத்தில் இருந்து பொது அமைப்புக்களினூடாக காணாமல் போனவர்களின் உறவுகள் ஒன்றினைந்து முள்ளிவாய்க்கால் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளோம்.
எங்களது இனத்தை கொத்துக்கொத்தாக அழித்ததினையும்,எமது இனம் பட்ட துன்பங்களையும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக நாங்கள் கலந்து கொண்டு நினைவு கூறவுள்ளோம்.
-நாங்கள் அன்றைய தினம் எமது நினைவு கூறல் நிகழ்வில் அரசியல்வாதிகளை எதிர் பார்க்கவில்லை.
காணாமல் போனவர்களின் உறவுகள்,யுத்தத்தினால் பாதீக்கப்பட்டவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
பாதீக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கின்ற பொது நிலையினர் அனைவரையும் கலந்து கொள்ள எதிர்பார்க்கின்றோம்.
எனவே அரசியல் வாதிகளை குறித்த நிகழ்வில் சம்மந்தப்படுத்த நாம் விரும்பவில்லை.என அவர் மேலும் தெரிவித்தார்.