ஈழத்தில் வெள்ளைக்கொடி விரித்தபடி சமர்க்களம் வந்த சமாதானப் புறாக்களை சமைத்து சாப்பிட்டனர் சிங்களர்படை! அங்கு புத்தனே நடத்துகின்றான் பிரியாணி கடை! என முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய துயரத்தினை மறைந்த கவிஞர் வாலியின் வலி சுமந்த வரிகள் சுட்டிக்காட்டுகின்றன.
முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிந்து ஒன்பது வருடங்களாகிவிட்டன. ஆனாலும் அந்த அவலத்தின் நினைவுகள் இன்னும் மனித நெஞ்சங்களை சுட்டெரிக்கின்றன.
இந்த மீளா துயரினை நினைவில்கொள்ளாதவர்கள் யாரும் இல்லை! இதை எண்ணி பெருந்துயர் அடையாதவர்கள் யாரும் இல்லை.
இந்நிலையில், ஈழ தமிழர்களின் தொப்புள் கொடி உறவை சுமந்து நிற்கும் தமிழ்நாட்டு உறவுகளின் மனங்களையும் இந்த முள்ளிவாய்க்கால் பேரவலம் வதைத்தது.
அதன் உணர்வுபூர்வமான வலிகளை தனது வரிகளில் வடித்துவிட்டுச்சென்றுள்ளார் மறைந்த கவிஞர் வாலி.
முள்ளிவாய்க்கால் தமிழன், விடிவெள்ளி வாய்க்காமல் தவிக்கிறானே…! என்ற வாலியின் துடிப்புள்ள வரிகள் ஈட்டியைப்போல் குத்தித் துளைக்கிறது ஆழ்மனதை.
அந்த வலி நிறைந்த வரிகளில் மேலும் பல,