News

யாழில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதிக்கு முதலமைச்சர் திடீர் விஜயம் .

யாழ். வலி வடக்கில் படையினர் வசமிருந்த 683 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த மாதம் 13ஆம் திகதி விடுவிக்கப்பட்டு அப்பகுதிகளில் மீள்குயேற்றப்பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் குறித்த பகுதிகளை வடமகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். இப்பகுதிகளில் மீள்குடியேறிவரும் மக்களை நேரில் சந்தித்த முதலமைச்சர் அவர்களின் மீள்குடியேற்றத்திலுள்ள குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.

சில பகுதிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் இருப்பதால் முழுமையான மீள்குடியேற்றம் இடம்பெறுவதில் சிக்கல் நிலவி வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்ததுடன், தமது தேவைகள் தொடர்பில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்புக்களை அணுகி தீர்வை பெற்றுத்தர தாம் முயற்சிப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். முதலமைச்சரின் இந்த விஜயத்தில் வடமாகாணசபை உறுப்பினர்களான பொ.ஐங்கரநேசன், ப.கஜதீபன், வலிவடக்கு பிரதேசசபை தவிசாளர் எஸ்.சுகிர்தன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி உள்ளிட்டவர்களும் இணைந்திருந்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top