News

யாழ்குடா நாட்டை கலங்கவைத்த குமுதினி படகு படுகொலை…!

முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் தமிழினத்தின் படுகொலை நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அரசும் அதனை சார்ந்த அடிவருடிகளும் இலங்கையிலும் ,சர்வதேசத்திலும் குரலெழுப்பினாலும் மறைமுகமாக இன்னும் ஈழத்தில் தமிழினமும் அதன் இருப்புக்களும் தினம் தினம் அழிக்கப்பட்டே வருகின்றது.இன்று ஈழத்திலே துப்பாக்கி சத்தங்கள் ஓய்ந்திருக்கின்றன. ஆட்சி மாறியிருக்கிறது. ஆனால் தமிழினத்துக்கு எதிரான காட்சிகள் வெவ்வேறு கோணத்தில் வெவ்வேறு காட்சிகளாக இன்னும் ஈழத்தில் ஒவ்வோர் மூலையிலும் சிங்கள பேரினவாதிகளினாலும், முஸ்லீம் இனவாதிகளாலும் நிலசுரண்டல் கலாசாரஆக்கிரமிப்பு,மதமாற்றம் ,திட்டமிட்ட குடியேற்றங்கள்,போன்ற இன்னோரன்ன பலகாரணிகளால் தமிழினம் நசுக்கப்பட்டு,ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் பூர்வீக குடியான தமிழினம் காலத்துக்காலம் பல்வேறுபட்ட சூழலில் இலங்கை பேரினவாதிகளால் படுகொலைசெய்யப்பட்டது .அந்தவகையில் தமிழினத்தின் முதல் படுகொலையானது 1956ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிங்கள மொழிச் சட்டத்தில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை நீடித்தாலும் குமுதினி படகு படுகொலையினை யாருமே மறந்துவிட முடியாது.

தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத நாட்கள் நீண்ட ஒரு வலியுடன் ஈழத்தமிழர்களின் மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு போன நாட்கள். தமிழ்தேசத்து மக்களின் மனங்களிலுள்ள புரையோடிப்போன சோத்தை யாராலும் எழிதில் மறந்து விடமுடியாது.எத்தனை தடைகள் விதிக்கப்பட்டாலும்,இந்த வரலாற்று சோகத்தை எவராலும் அணைத்துவிடமுடியாது.

1985 ம் ஆண்டு இதே தினத்தில் குமுதினி படகிலிருந்த அப்பாவித்தமிழர்கள் ஈவுஇரக்கமின்றி படுகொலைசெய்யப்பட்டு வங்கக்கடலிலே அவர்களது உயிர்கள் சங்கமித்து இன்றுடன் 34 ஆண்டுகளாகின்றன. நடுக்கடலில் நடந்த சம்பவம் சரித்திரம் மறக்காத சாவு மட்டுமல்ல நமது மனங்களில் இருந்து நீங்க மறுக்கும் படுபாதக,கொடூரமான,மனித நேயத்திற்கு சவால் விடுகின்ற நினைவுகளாகி ஒவ்வொரு தமிழனின் மனங்களிலும் ஆறாத்துயரை ஏற்படுத்துகின்றது.

குழந்தைகளும்.,குடும்பங்களும் மாண்ட சோகம்.கொலை வெறிதரித்தவர்களால் வங்கக்கடலில் மறத்தமிழினத்திற்கு நடந்த படுகொலை இன்றுவரை எமது இதயங்களில் நீங்காத வடுவாகவேயுள்ளது.

குமுதினி படகு படுகொலையானது 1985ம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி காலை 7.15 க்கு நெடுந்தீவு மாவலி துறைமுகத்திலிருந்து 80க்கு மேற்பட்ட பயணிகளுடன் நயினாதீவு குறிகட்டுவான் துறைமுகத்தை நோக்கி குமுதினி படகு செல்லத்தயாரானது. 1960 களில் இலங்கை அரசால் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தபட்டதும் நெடுந்தீவு மக்களை வெளியுலக தொடர்பில் வைத்திருக்க உதவிய படகும் இதுவாகும்.இப் படகில் இயந்திர அறையானது முன்பகுதி,பின்பகுதி என பிரிக்கப்பட்டு அதன் அமைப்பு காணப்பட்டது.

காலை 7.15 (+6.GMT) குமுதினி படகில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள்,முதியவர்கள் என 80 க்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்தனர்.குமுதினி செல்லத்தயாரானது.ஒரு அரை மணி நேரத்தின் பின் படகானது ஆழ்கடல் பிரதேசத்தை அண்மித்துக்கொண்டிருக்கையில் திடீரென கறுப்பு நிற கண்ணாடி படகில் வந்த சிலரால் படகு வழிமறிக்கப்பட்டது.அதில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிலர் இருந்தனர்.கையில் முக்கோண கூர்கத்தியும்,கண்டங்கோடாரிகள் ,இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினி படகில் ஏறினர்.பின்புறம் இருந்த பயணிகளை இயந்திர அறையினுள் செல்லுமாறு அரை குறை தமிழில் மிரட்டினர்.அவர்களும் பீதியுடன் நகர்ந்தனர்.பின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால் இயந்திரத்திலிருந்து பின்புறம் செல்லும் ஆடுதண்டு பகுதியை அவர்கள் அகற்றினர்.இருக்கை மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட சுமார் நான்கு அடி ஆழமானதாக இருந்தது.இதன் பின் பணியாளர்கள் உட்பட உள்ளே அழைக்கப்பட்டனர்.

குமுதினியின் இரு பக்க வாசல்களிலும் உள்ளும் வெளியுமாக கடற்படையினர் அமர்ந்திருந்தனர்.ஒவ்வொருவராக அழைத்து கத்தியால் வெட்டியும் இரும்புகம்பியால் தாக்கியும் கொலை செய்து படகின் ஆடுதண்டுபகுதியில் போட்டனர்.இப்படி கொல்லப்படுபவர்களின் அவலக்குரல் கேட்கக்கூடாது என்பதற்காக அவர்களின் ஊரையும் பேரையும் உரக்க சொல்லுமாறு வந்தவர்களால் அரைகுறை தமிழில் பணிக்கப்பட்டது.அவலக்குரல் எழுப்பமுடியாது இறந்தவர்கள் போல் இருந்தவர்களும் உண்டு.கடுமையாக தாக்கப்பட்டு குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கொலைகாரர்கள் கருத்தினார்கள்.உயிர்தப்பிய பயணிகளில் ஒருசிலர் கடலில் குதிக்கவே வேறுசிலரும் அவர்களுடன் குதிக்க தொடங்கினர்.இதனை கண்ட ஆயுதாரிகள்அவர்கள் மீது சரமாரியாக சுடத்தொடங்கினர்.சுமார் 45நிமிடங்கள் இக் கொலைவெறித்தாண்டவம் அரங்கேறியது.பின்னர் வந்தவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இச் சம்பவத்தில்சுபாஜினிவிசுவலிங்கம் முதல்70வயது தெய்வானை வரை உயிரிழந்தனர்.இப்படுகொலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36-48வரை என தெரிவிக்கப்படுகின்றது.ஆனால் பன்னாட்டு மன்னிப்பு சபை தனது அறிக்கையில் இறந்தோர் எண்ணிக்கை 26என தெரிவிக்கிறது.21பேர் காயங்களுடன் மீட்கப்பட்டிருந்தனர்.இவர்கள் பூங்குடுதீவு வைத்தியசாலையிலும்,யாழ் போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டருந்தனர்.எஞ்சிய சாட்சிகளைத்தேடி கொலைகாரர்கள் வைத்தியசாலைகளிலும் அலைந்ததும் உண்டு.இது தொடர்பாக பன்னாட்டு மன்னிப்பு சபை இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர்,காயப்பட்டவர்களின் அடிப்படையில் அப்போதைய இலங்கை அரசுக்கு விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.இதில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு முறைப்படி சட்ட நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியிருந்தது.இப் படுகொலைகள் நயானாதீவு கடற்படைத் தளத்தை சேர்ந்தோரால் மேற்கொள்ளப்பட்டிருந்த வேளையில் இலங்கை அரசின் அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த லலித் அத்துலத்து முதலி இக் குற்றத்தை திட்டவட்டமாக மறுத்ததோடு இக் குற்றத்தை யார் புரிந்தார்கள்.? என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என தெரிவித்திருந்தார்

எது எவ்வாறு இருப்பினும் இச் சம்பவம் நடந்து இன்றுடன் 34அகவை ஆனாலும் இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நியாயங்களும் இதுவரை கிடைக்கவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.தமிழினத்துக்கெதிராக இலங்கையில் இடம்பெற்றுவந்த படுகொலைகளை ஐநாவானது ஆதாரங்கள் இருந்தும் வெறும் பார்வையாளராக வேடிக்கை பார்க்குறதே தவிர தமிழினத்துக்கான நீதியை பெற்றுத்தருவதில் சோபையிழந்தே காணப்படுகிறது.இருப்பினும் நீதி கிடைக்காது ஈழத்தில் உயிரிழந்த அப்பாவி மக்களை வருடாவருடம் நினைவுகூருவது மட்டுமே யதார்த்தமாகியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top