News

யாழ். பல்கலை மாணவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் .

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான எமது கோரிக்கையினை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஏற்றுக்கொண்டுள்ளார் என யாழ். பல்கலைக்கழக மாணவர் கிருஸ்ணமேனன் தெரிவித்துள்ளார். இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 100 சதவீதம் உணர்வெழுச்சியுடன் மக்கள் மயப்படுத்தப்பட்ட நினைவேந்தலாக நினைவுகூரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் இன்றைய தினம் முதலமைச்சரின் இல்லத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடியதன் பின்னர் பெரிய நம்பிக்கை ஒன்று எமக்கு ஏற்பட்டுள்ளது. இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் உலகிற்கு ஒரு செய்தியை கூறுவதாய் உணர்வெழுச்சியுடன் இடம்பெறும். இந்த நினைவேந்தல் முழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்ட நினைவேந்தலாக இருக்கவேண்டும் என்பதை முதலமைச்சர் ஏற்றுகொண்டுள்ளார்.

எனினும் நினைவேந்தலை வடமாகாண சபை நடத்துவதா அல்லது யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தலைமையேற்று நடத்துவதா என்பது தொடர்பில் நாளைய தினம் முதலமைச்சர் முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் குறித்த கூட்டத்தில் கலந்து, வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top