News

வடக்கில் காணிகளை விடுவிக்க காரணம் இதுதான் – சி.வி.விக்னேஸ்வரன்

சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாகவே வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள் விடுவிக்கப்பட்டதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “காணிகளை விடுவிக்க தமிழ் மக்களுக்காக யாரும் எதனையும் செய்யவில்லை. சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாகவே வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, வடக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதற்கு எவ்வித காரணங்களும் இல்லை” என முதலமைச்சர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top