விக்கியின் முள்ளிவாய்க்கால் உரைக்குப் பின்னர் மகிந்த சீற்றம் .

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் முள்ளிவாய்க்கால் உரை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமிருந்து பதில் வெளிப்பட வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பேலியகொடையில் இன்று இடம்பெற்ற இராணுவ நினைவு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சர்வதேசத்துக்கு வெளியிட்ட அறிவிப்பு தொடர்பில் அரசாங்கம் அறிவிப்பொன்றை வெளியிடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துக்கு தாம் எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.