News

விமானத்தில் வெடிகுண்டு பீதியை கிளப்பிய நபர்: உயிர் பயத்தில் வெளியேறிய 10 பேர் காயம் …

இந்தோனேசியாவில் தனியார் விமானம் ஒன்றில் பயணி ஒருவர் வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பியதால் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் அமைந்துள்ள விமான நிலையத்தில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திங்களன்று இரவு லயன் விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று 189 பயணிகளுடன் Borneo தீவில் இருந்து தலைநகர் ஜகார்த்தாவுக்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.

அப்போது 26 வயது Frantinus Nirigi என்ற பயணி அந்த விமானத்தின் ஊழியர் ஒருவரிடம் மிக சாதாரணமாக, குறித்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். பேசிமுடிக்கும் முன்னரே அந்த விமானத்தில் இருந்த எஞ்சிய பயணிகள் அவசர காலத்தில் வெளியேற பயன்படுத்தும் ஜன்னலை உடைக்கத் துவங்கியுள்ளனர். சிலர் என்ஜின் அறை வழியாக தப்பிக்க முயன்றுள்ளனர். இந்த களேபரத்தில் சிக்கி 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து விமான நிலைய பொலிசார் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்களுடன் விமானம் சோதனை செய்யப்பட்டது. ஆனால் அந்த விமானத்தில் வெடிகுண்டு எதையும் நிபுணர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து வெடிகுண்டு புரளியை கிளப்பிய இளைஞரையும், அவசரகால ஜன்னலை உடைத்து வெளியேற முயற்சித்த நபரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு விமான நிலைய பொலிசார் உத்தரவிட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top