வீட்டில் படுகாயங்களுடன் சடலமாக கிடந்த மூன்று குழந்தைகளின் தாய்: நடந்தது என்ன?

கனடாவில் வீட்டில் படுகாயங்களுடன் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள். டொரண்டோவின் East York நகராட்சியில் தான் இச்சம்பவம் சனிக்கிழமை நடந்துள்ளது. சம்பவம் நடந்த வீட்டுக்கு பொலிசார் அதிகாலை 2.15 மணிக்கு அக்கம்பக்கத்தினர் தகவலின் பேரில் சென்றுள்ளார். அப்போது வீட்டில் ரோடிரீ எஸ்ட்ரடா (41) என்ற மூன்று குழந்தைகளின் தாய் படுகாயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.
அக்கம்பக்கத்தினரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் ரோடிரீ வீட்டுக்குள் பக்கவாட்டு ஜன்னல் வழியாக நபர் ஒருவர் நுழைந்துள்ளது தெரியவந்துள்ளது. அவர் தான் ரோடிரீயை கொலை செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். ரோடிரீயின் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ள நிலையில் சம்பவம் குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.