News

வீட்டை விழுங்கும் எரிமலை குழம்பு: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள்….

ஹவாய் தீவிலுள்ள Kilauea எரிமலை வீடு ஒன்றை விழுங்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்கு வாரங்களாக எரிமலைக் குழம்பைக் கொப்புளித்து வரும் Kilauea எரிமலை அதன் பாதையில் குறுக்கிடும் அனைத்தையும் கபளீகரம் செய்து வருகிறது.

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் எரிமலைக் குழம்பு ஒரு வீட்டின் பின்புறமாக வந்து அதை அழிக்கும் காட்சி வெளியாகியுள்ளது. மே மாதம் 3 ஆம் திகதி எரிமலைக் குழம்பை வெளியிட ஆரம்பித்த Kilauea எரிமலையின் சீற்றத்தால் 2000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இதற்கிடையில் எரிமலையிலிருந்து வெளியாகும் புகை 3,700 கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள மார்ஷல் தீவுகள் வரை பரவி விட்டது. சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் விமான நிறுவனங்களும் கப்பல்களும் சுற்றுப்புறம் மங்கலாக இருப்பதால் கவனித்து பயணிக்குமாறும் வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்னும் சில நாட்களில் புகை மைக்ரோனேஷியா வரை பரவ வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top