News

110 பேர் உயிரிழந்த விமான விபத்தின் கருப்பு பெட்டி கிடைத்தது !

கியூபாவில் 110 பேரை பலிகொண்ட விமான விபத்தில் இரண்டு கருப்பு பெட்டிகளில் ஒரு கருப்பு பெட்டி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபாவில் கடந்த வெள்ளிக் கிழமை பயணிகள் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 110 பேர் பரிதாபமாக பலியாகினர்.

கடந்த 30 வருடங்களில் கியூபாவில் நடந்த மிக பெரிய விபத்தாக இது பார்க்கப்படுகிறது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து தெரியவில்லை எனவும், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விமானத்தில் இருந்த இரண்டு கருப்பு பெட்டிகளில் ஒரு கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும், அது நல்ல நிலையில் இருப்பதாகவும், இன்னும் ஒரு பெட்டியை தேடிவருவதாகவும் அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கருப்பு பெட்டியில் விமானத்தின் அனைத்து தகவல்களும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது விபத்திற்கு முன்னர் விமான ஓட்டுனர் கட்டுப் பாட்டு அறைக்கு என்ன கூறினார். விமானம் என்ன பிரச்சனை காரணமாக விழுந்து நொறுங்கியது என்பது போன்ற அனைத்து தகவல்களும் இருக்கும்.

மேலும் விமானத்தில் 104 பயணிகளும் 9 விமான ஊழியர்களும் பயணம் செய்துள்ளனர். இறந்த 110 பேரில் 99 பேர் கியூபா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், 6 பேர் விமானத்தின் ஊழியர்கள் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் 2 பேர் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் எனவும் ஒரு நபர் மெக்சிகோ பயணி எனவும் 2 பேர் வெஸ்டர் சகாராவைச் சேர்ந்தவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top