120 பயணிகளுடன் பயணித்த படகில் பாரிய தீ

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் சட்டத்திற்கு முரணான வகையில் 120 பயணிகளுடன் பயணித்த படகொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஆந்திராவின் கோதாவரி நதியில் 120 பயணிகளுடன் சட்டத்திற்கு முரணான வகையில் சுற்றுலாப் பயணிகளுடன் படகு சென்று கொண்டிருந்தபோது படகில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந் நிலையில் இந்த விபத்து சம்பந்தமாக தகவல் அறிந்த தீ அணைப்புத் துறையினர் அங்கு சென்று தீயை கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வந்தனர்.
இதுவரையிலும் 80 பேரை உயிருடன் மீட்டுள்ளதாகவும், அதிகளவிலான பயணிகளை ஏற்றியதும் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த விபத்தில் உயிரிழப்புக்கள் தொடர்பாக இதுவரை எந்த தகவலும கிடைக்கப் பெறவில்லை.