News

2 கால்களின்றி எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த 70 வயது முதியவர்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் தனது 2 கால்களையும் இழந்த சீனாவைச் சேர்ந்த சியா போயு என்ற 70 வயது முதியவர் தற்போது அதே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
சீனாவைச் சேர்ந்த சியா போயு மலையேறும் வீரராவார். இவர் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் தனது 2 கால்களையும் இழந்தார்.

இந்நிலையில், 70 வயதான சியா போயு தற்போது எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளார். இதன் மூலம் 2 கால்கள் இல்லாமல் உலகின் மிக உயரமான சிகரத்தை அடைந்தவர் என்ற பெருமையை சியா போயு பெற்றுள்ளதாக நேபாளத்தின் சுற்றுலாத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சியா போயுவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top