News

4 வயது குழந்தையை காப்பாற்றிய பிரான்ஸ் ஹீரோவுக்கு வேலை !

பாரீஸில் மாடியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் காப்பாற்றிய ஹீரோ Mamoudou Gassamaவிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உறுதியளித்தபடி தீயணைப்புத்துறையில் வேலை வழங்கப்பட்டுள்ளது. மாதம் 600 யூரோக்கள் அவருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

22 வயதான மாலி நாட்டவரான Mamoudouயின் தன்னலமற்ற உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு சட்டப்பூர்வமாக புலம்பெயர்ந்தோர் உரிமை அளிக்கப்பட்டுள்ளதோடு பிரான்ஸ் தீயணைப்புத் துறையில் வேலையும் வழங்கப்பட்டுள்ளது.

செவ்வாயன்று அவரது புலம்பெயர்வோருக்கான ஆவணங்கள் ஃபாஸ்ட் ட்ராக் முறையில் பரிசீலிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு நிலையம் ஒன்றிற்கு சென்ற அவர் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளுக்காக மாதம் 600 யூரோக்கள் உதவித்தொகையுடன் 10 மாதங்கள் பணி புரியும் வேலை ஒன்றில் இணைந்துள்ளார்.

சுமார் மூன்று மாதங்களுக்குள் அவருக்கு பிரான்ஸ் குடியுரிமை கிடைக்கும். Gassamaவின் குடியுரிமைக் கோரிக்கையைப் பரிசீலித்த உள்ளூர் அதிகாரி ஒருவர் “அவர் ஆபத்திலிருந்த ஒருவருக்கு உதவியிருக்கிறார், நம் சமுதாயத்தில் இத்தகைய விடயங்கள் நடப்பது அபூர்வம்” என்று தெரிவித்தார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top