News

தமிழீழத் தேச கட்டுமானம் குறித்து விவாதிக்க கூடுகின்றது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத் தின் நேரடி அரசவை. .

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வு அமெரிக்காவின் பொஸ்ரன் பெருநகரில் இடம்பெறவுள்ளது. தமிழீழத் தேசிய துக்க நாளாகிய மே-18 முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையினைத் தொடர்ந்து மே 19,20 ஆகிய நாட்களுக்கு அமர்வு நடைபெறவுள்ளது. புலம்பெயர் நாடுகளில் அரசவை உறுப்பினர்களாக இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மேலவை உறுப்பினர்கள், மதியுரைக்குழு உறுப்பினர்கள், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் உட்பட பல பன்னாட்டு பிரதிநிதிகள், பன்னாட்டு நீதியில் புகழ்மிக்க சட்ட வல்லுனர் பேராசிரியர் ஹீதர் ரயான் என பலரும் பங்கெடுக்கவுள்ளனர்.

>குறிப்பாக தென் சூடானின் பொதுவாக்கெடுப்பில் முக்கிய பங்காற்றியிருந்த லாடு ஜடா குபெக் இந்த அமர்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். தமிழ்த் தேசியப் போராட்டத்தின் நடப்பு நிலை உட்பட ஈழத் தமிழர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல சிக்கல்கள் குறித்தும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை விவாதிக்கும் எனவும், பல தீர்மானங்கள் இயற்றப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாடுகடந்த தமிழீழ அரசாங்க அமைச்சர்களின் முன்னேற்ற அறிக்கைகளும், ஆண்டு நிதிநிலை அறிக்கையும் அரசவையில் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அரசவை அமர்வில், ஸ்ரீலங்காவுக்குத் தரப்பட்ட கால நீட்டிப்பு முடிவடையும் 2019 மார்ச்சு ஐ.நா மனிதவுரிமைப் பேரவை நோக்கிய செயலொற்றுமை, தமிழர் தலைவிதி தமிழர் கையில் – ‘ வேண்டும் பொதுவாக்கெடுப்பு’ இயக்கம் 2018 மற்றும் தமிழீழத் தேசக் கட்டுமானம், தமிழர்களின் புதுமையான அரசியல் இயக்கம் என்ற முறையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் – சாதித்தவை பற்றிய மதிப்பீடு ஆகிய நான்கு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்படுகின்றது. தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை என ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top