News

ஃப்ளோரிடா ரோலர் கோஸ்டர் விபத்து: இரண்டு பேர் நிலைமை கவலைக்கிடம் .

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்திலுள்ள Daytona கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த ரோலர் கோஸ்டர் ஒன்று தடம் புரண்டதில் காரிலிருந்த இருவர் 34 அடி உயரத்திலிருந்து கீழே வீசியெறியப்பட்டனர், அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இருவர் ரோலர் கோஸ்டரிலிருந்து தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த நிலையில் மீட்புக்குழுவினர் 10 பேரை மீட்டனர்.

ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. Sandblaster என்னும் அந்த ரோலர் கோஸ்டர் 40 ஆண்டுகள் பழமையானது மட்டுமின்றி பல பாதுகாப்புக் குறைபடுகள் கண்டறியப்பட்டதால் ஓரங்கட்டப்பட்டிருந்தது.

நேற்றிரவு ஏற்பட்ட இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதி முழுவதும் மக்களின் அலறல் ஒலி கேட்ட வண்ணமாகவே இருந்தது. ரோலர் கோஸ்டரில் வரிசையாக சென்று கொண்டிருந்த கார்களில் முதல் காரில் நான்கு பேர் அமர்ந்திருந்தனர், அவர்களில் இருவர் மேலிருந்து தரையில் வீசியெறியப்பட்டனர்.

இரண்டாவது காரில் நான்கு பேர் அமர்ந்திருந்தனர், மூன்றாவது காரிலிருந்த இரண்டு பேர் சிக்கிக் கொண்டனர். இருவர் தலைகீழாக அரை மணி நேரம் தொங்கிக் கொண்டிருந்த பின்னரே மீட்புக் குழுவினரால் அவர்களை மீட்க முடிந்தது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top