அமெரிக்காவில் உயர் பதவிகளுக்காக போட்டியிடும் இரு இலங்கை தமிழர்கள்..

அமெரிக்காவில் வாழும் இலங்கையை சேர்ந்த உடன்பிறப்புக்கள் இருவர் அமெரிக்காவில் அரசியல் மற்றும் சட்டத்துறை உயர் பதவிகளுக்காக போட்டியிடுகின்றனர். கிரிஷாந்தி விக்னராஜா, மெரிலேன்ட் மாநில ஆளுநர் பதவிக்காக போட்டியிடுகின்றார்.
இந்த நிலையில், அவரின் சகோதரரான திரு, பால்டிமோர் நகர அரச சட்டத்தரணி பதவிக்காக போட்டியிடுகின்றார் என இந்தியா வெஸ்ட் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.
கிரிஷாந்தி விக்னராஜா அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி, மிச்சேல் ஒபாமாவின் கொள்கை வகுப்பு பணிப்பாளராக வெள்ளை மாளிகையில் பணியாற்றியுள்ளார்.
அத்துடன் இந்த உடன்பிறப்புக்களின் பெற்றோர் 1990ஆம் ஆண்டுகளில் இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக அமெரிக்காவுக்கு சென்றிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.