அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கு 22 வயது இந்திய வாலிபர் போட்டி!

நியூயார்க் : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண கவர்னர் தேர்தலில், இந்தியாவை சேர்ந்த 22 வயது மென்பொறியாளர் சுபம் கோயல் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராக இருமுறை இருந்த ஜெர்ரி பிரவுன் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதையடுத்து, அந்த பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 22 வயது மென்பொறியாளர் சுபம் கோயல் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சுபம் கோயல், கலிேபார்னியா பல்கலைகழகத்தில் பொருளாதாரம் மற்றும் சினிமா சார்ந்த படிப்பை முடித்து, ஐ.டி துறையில் பணியாற்றி வருகிறார். கவர்னர் தேர்தலுக்காக, கையில் சிறிய ஸ்பீக்கரை ஏந்தியபடி, வீதிகளில் பிரசாரம் மேற்கொள்ளும் சுபம் கோயல், அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி வருகிறார். கலிபோர்னியாவில் ஊழலை ஒழிப்பேன் என்ற பிரசாரத்துடன் களமிறங்கியுள்ள இவர், இந்திய சமூகத்தினர் முடிவு எடுக்கும் நிலைக்கு முன்னேற வேண்டும் என்றும் கோரிக்ைக விடுத்துள்ளார்.