அமெரிக்க நட்சத்திர ஹொட்டலில் துப்பாக்கிச்சூடு: மரண பயத்தில் அலறிய பொதுமக்கள் !!

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர ஹொட்டலில் திடீரென்று துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததை அடுத்து பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் பிரபல சூதாட்ட நகரமான லாஸ் வேகஸில் நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து குறித்த ஹொட்டலில் 15 வாகனங்களில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
லாஸ் வேகஸ் நகரில் செயல்படும் முக்கிய ஹொட்டல்களில் ஒன்று Westin. இங்கேயே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. குறித்த ஹொட்டலில் அவுஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் பலர் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலிய குத்துச்சண்டை நட்சத்திரம் Jeff Horn போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்காக லாஸ் வேகஸ் சென்றுள்ளார். இந்த நிலையிலேயே துப்பாக்கிச்சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹொட்டல் ஊழியர்களுக்கு பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், வாடிக்கையாளர்களையும் அமைதி காக்குபடி தெரிவித்துள்ளனர். இதனிடையே துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பொலிசார் தேடி ஹொட்டலுக்குள் புகுந்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் லாஸ் வேகஸ் ஹொட்டல் ஒன்றில் இருந்து Stephen Paddock என்ற பயங்கரவாதி இசை விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 58 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.