News

இன்று உலக இசை தினம் – இசையால் உலகை இணைப்போம்…

இசைத்துறையில் சாதனைப்படைத்தவர்களை பெருமைப்படுத்தும் விதமான உலகம் முழுவதும் இன்று இசை தினம் கொண்டாடப்படுகிறது. #WorldMusicDay

இசை என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை. சங்கீதம் என்பது செவிக்கு இன்பம் தரும் ஒலிகளைப் பற்றிய கலையாகும். இது சிறந்த கலைகளில் ஒன்று.

இசை இன்று பல்வேறு பயன்களைத் தருகின்றது. தற்போது படித்தவர் முதல் பாமரர் வரை இசை பரவி நிற்கின்றது. இணையத்தில் அன்றாடம் பார்க்கப்படும் காணொளிகளில் இருபது விழுக்காடு இசை சம்பந்தமாகப் பார்க்கப்படும் காணொளிகளாகும்.

இந்நிலையில், இசைத்துறையில் சாதனைப்படைத்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ந்தேதி உலக இசை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது.

இசைத்தினமான இன்று சமூக ஊடகங்களில் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். #WorldMusicDay

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top