இயற்கைக்கு மாறாக கனடாவில் பனிப்பொழிவு அதிர்சியில் மக்கள்!

நியு பவுன்லாந் மக்கள் திங்கள்கிழமை காலை எழுந்த சமயம் வெளியில் பனிப்பொழிவின் வெள்ளை நிற தோற்றத்தை கண்டு அதிர்சியடைந்துள்ளனர். நியு பவுன்லாந்தில் சென்.ஜோன்ஸ் பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டதன் காரணமாக வெப்பநிலை -7 Cஆக வீழ்ச்சியடைந்து காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வசந்த காலத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை அன்னையின் சீற்றத்தினால் கவலை அடைந்துள்ளதாக அப்பகுதி பாடசாலை மாணவர் ஒருவர் தெரிவித்தார். இது ஒரு கொடூரமான வசந்த கால நகைச்சுவை எனவும் வர்ணிக்கப்படுகின்றது. மக்கள் குளிர்கால கோர்ட்டுகளுடனும் காலணிகளுடனும் தங்களை மூடியவண்ணம் காணப்படுகின்றனர். யூன் மாதம் 4ந்திகதி வாகனங்களின் காற்று தடுப்புகள் கண்ணாடிகள் பனியால் மூடப்பட்டுள்ளன.