News

இருவேறு துருவங்களான டிரம்ப் – கிம் யொங் உன் ஆகியோர் வரலாற்று சந்திப்பு..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று காலை சிங்கப்பூரில் நடைபெற்றது.

டிரம்பும், கிம்மும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர். இவர்கள் தங்களது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்டவை பற்றி பேச உள்ளனர்.

இதையடுத்து, இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை முடிந்தது. இரு நாட்டு தலைவர்களும் சுமார் 45 நிமிடம் பேசினர்.

சந்திப்பு முடிந்து வெளியே வந்ததும் இரு நாட்டு தலைவர்களும் ஓட்டலின் பால்கனியில் நின்றபடி செய்தியாளர்களை பார்த்து கையசைத்தனர்.

இந்த பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப் கூறுகையில், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் உடனான பேச்சுவார்த்தை நன்றாக அமைந்தது என தெரிவித்தார்.

இன்றைய நாள் மிகச்சிறப்பானதாக அமைந்தது நாங்கள் இருவரும் பரஸ்பரம் ஏனையவர்கள் குறித்தும் இரு நாடுகள் பற்றியும் பல விடயங்களை இன்று அறிந்துகொண்டோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரிய ஜனாதிபதி பற்றி என்ன அறிந்தீர்கள் என செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு அவர் திறமைமிக்கவர் என்பதை நான் அறிந்துகொண்டேன்,அவர் தனது நாட்டை அதிகம் நேசிப்பதையும் நான் அறிந்துகொண்டேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மீண்டும் சந்திப்பீர்களா என நிருபர்கள் கேள்வி எழுப்பியவேளை பல தடவைகள் சந்திப்போம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வடகொரிய ஜனாதிபதிகள் இருவரும் சற்றுமுன்னர் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.

உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் நிகழ்விற்காக உருவாக்கப்பட்டிருந்த பகுதிக்குள் ஓன்றாக நுழைந்த இருவரும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

நாங்கள் மிக முக்கியமான முழுமையான உடன்படிக்கையில் கைச்சாத்திடுகின்றோம், என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top