இலங்கை ராணுவ தளபதியை சந்தித்த கனேடிய தூதுவர் .

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.இராணுவத் தலைமையகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. போருக்குப் பிந்திய சூழலில் இராணுவத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும், நல்லிணக்க முயற்சிகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் கனேடியத் தூதுவருடன், கனேடியத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரும், கலந்து கொண்டார். அத்துடன், இராணுவத் தளபதியுடன், இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க, இராணுவத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேரா ஆகியோரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.