News

இளைஞரை நடுத்தெருவில் இழுத்து வந்து கொடூரமாக தாக்கி கொலை செய்த கும்பல் !!

அமெரிக்காவில் மளிகை கடை ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரை இழுத்து வந்து கும்பல் ஒன்று அவரை கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகி பார்வையாளர்களை கலங்கடித்துள்ளது. நியூயார்க் நகரின் பிராங்க்ஸ் பகுதியில் அமைந்துள்ள Cruz and Chiky மளிகை கடையின் உள்ளே இருந்து Lesandro Guzman-Feliz என்ற 15 வயது இளைஞரை கும்பல் ஒன்று தர தரவென இழுத்து வந்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளது.

அந்த கும்பலில் ஒருவர் நீளமான வாள் ஒன்றை பயன்படுத்து அந்த இளைஞரை கொடூரமாக தாக்கியுள்ளதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 4 பேர் கொண்ட அந்த கும்பல் குறித்த இளைஞரை ரத்தம் சொட்ட கொடூரமாகன் தாக்கிவிட்டு இரவு சுமார் 11.40 மணியளவில் இரண்டு கார்களில் மாயமாகியுள்ளது. இதனிடையே வாள்வெட்டு காயங்களால் படுகாயமடைந்திருந்த குறித்த இளைஞர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், ஆள்மாறாட்டம் காரணமாகவே குறித்த இளைஞர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பாலியல் தொடர்பான வீடியோ ஒன்றை நோட்டமிட்ட கும்பல், அடையாளம் தெரியாமல் இந்த இளைஞரை தாக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தற்போது கொலை வழக்கு மற்றும் அந்த பாலியல் வீடியோ காட்சிகள் உள்ளிட்ட இரு வழக்குகளையும் பொலிசார் விசாரித்து வருகின்றனர். கழுத்தில் ஏற்பட்ட ஆழமான காயமே இளைஞர் மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top