News

இஸ்ரேல் படைகள் மீது காரை ஏற்றி கொல்ல முயன்றவர் சுட்டுக்கொலை!

இஸ்ரேலின் மேற்குக்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த படைகள் மீது காரை ஏற்றி கொல்ல முயன்றவரை சுட்டு கொன்றுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். அதைத்தொடர்ந்து ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் தொடங்கப்பட்டது. இதற்கு, பாலஸ்தீன மக்கள் இரண்டு நாடுகளின் எல்லை பகுதியில் உள்ள இஸ்ரேல் படைகளின் மீது அடிக்கடி கல்வீசி தாக்குதல் நடத்தி தங்களது கடுமையான எதிர்ப்பை காட்டிவருகின்றனர்.

இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனதிற்கு இடைப்பட்ட சர்ச்சை பகுதியான மேற்குக்கரை பகுதியில் இருக்கும் இஸ்ரேல் படைகளின் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற நபரை இஸ்ரேல் படைகள் இன்று சுட்டுக்கொன்றது.

“இஸ்ரேல் படைகளை நோக்கி பயங்கரவாதி ஒருவர் வேகமாக காரை ஓட்டி வந்து மோத முயன்றார். ஆனால், அவரின் மீது படைகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றது. இதில் இஸ்ரேல் படையினர் யாருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை’’ என இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பாலஸ்தீன சுகாதரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. ஆனால் இது குறித்த எந்த கருத்தும் அங்கிருந்து வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top