ஈராக்கின் பாக்தாத் நகரில் வெடி மருந்து கிடங்கு வெடித்து 7 பேர் பலி22 பேர் காயமடைந்துள்ளனர்.

ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் வெடிமருந்து கிடங்கு வெடித்து சிதறியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்,22 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் சதர் மாவட்டத்தில் ஷியா பிரிவினருக்கான மசூதி ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியருகே ஆயுத குழு ஒன்று வீடு ஒன்றில் ஆயுதங்களை சேமித்து வைத்து ஆயுத கிடங்காக பயன்படுத்தி வந்துள்ளது.
இங்கு ராக்கெட் எறிகுண்டுகள் உள்ளிட்ட சக்தி வாய்ந்த ஆயுதங்கள் வைக்கப்பட்டு இருந்துள்ளன. இந்த நிலையில் ஆயுத கிடங்கில் உள்ள ஆயுதங்கள் திடீரென வெடித்து சிதறியுள்ளன. இதனால் அருகில் இருந்த வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.