News

எங்கள் அப்பாவை உடன் விடுவிக்கவேண்டும் ஜனாதிபதி மாமா! – ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் மீண்டும் கோரிக்கை

“எமது அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். எனவே, ஆயுள் சிறைத்தண்டனையை அனுபவித்துவரும் எமது அப்பாவான தமிழ் அரசியல் கைதி சச்சிதானந்தம் ஆனந்தசுதாகருக்கு ஜனாதிபதி மைத்திரி மாமா மன்னிப்பு வழங்கவேண்டும். அப்பாவைத் தாமதமின்றி உடன் விடுவிக்கவேண்டும்.”
– இவ்வாறு ஆனந்தசுதாகரின் இரு பிள்ளைகளும் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வலியுறுத்தினர்.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கே.கிருஷ்ணா தலைமையிலான நவோதயா மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top