News

எமது இனத்தின் புல்லுருவிகளும் வரலாற்றை மாற்றியமைத்து விட்டார்கள் -சிறிதரன் எம்.பி. !!

கடந்த அர­சோடு இருந்த எமது இனத்­தின் புல்­லு­ரு­வி­க­ளும் சிங்­கள அரசு விரும்­பி­யது போன்று கிளி­நொச்சி மண்­ணின் வர­லாற்றை மாற்றி எமது இனத்­துக்கு பெரும் துரோ­கம் இழைத்­தி­ருக்­கி­றார்­கள். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­ஞா­னம் சிறித­ரன் தெரி­வித்­துள்­ளார்.

கிளி­நொச்­சி­யில் நேற்று இடம்­பெற்ற கிளி­நொச்சி மண்­ணில் இருந்து ஆன்மிக சமூ­கப்­ப­ணி­கள் ஆற்­றிய பெரி­யார்­க­ளின் சிலை­களை திறந்து வைத்து உரை­யாற்­று­கை­யிலே நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

எமது இனம் இருப்­பைத் தக்க வைப்­ப­தற்­கா­க­வும் அர­சி­யல் தீர்­வுக்­கா­க­வும் இந்த மண்­ணிலே 70 ஆண்­டு­க­ளுக்கு மேலாக போரா­டிக் கொண்­டி­ருக்­கி­றோம். சிங்­கள அரசு எமது இனத்­தின் வர­லாற்றை அழிப்­ப­தற்கு திட்­ட­மிட்டு செயற்­ப­டு­கி­றது. குறிப்­பாக கடந்த அரசு எமது மண்­ணி­னு­டைய வரா­லா­று­ களை மாற்­று­வ­தில் கடும் முயற்­சி­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தது.கிளி­நொச்சி மண்­ணிலே டிப்­போச் சந்­தி­யில் உள்ள இரா­ணுவ நினை­வுச் சின்­னத்­திலே பழமை வாய்ந்த கற்­களை வைத்து அந்த நினை­வுச் சின்­னத்தை கட்­டி­யெ­ழுப்­பி­யி­ருப்­ப­தன் நோக்­கம் தான் என்ன? இதற்­குப் பின்­னால், வர­லாற்றை மாற்றி அவர்­கள் தங்­க­ளுக்கு தேவை­யான வர­லாற்றை எழுத சிங்­கள அரசு விரும்­பு­கி­றது. அதற்கு நாம் ஒரு­போ­தும் இட­ம­ளிக்­க­மு­டி­யாது.

இவற்றை எல்­லாம் கவ­னத்­தில் எடுத்தே, எமது தலை­வர் பாட­சா­லை­க­ளில் தமி­ழீழ வர­லாறு என்­கின்ற பாடத்தை பாட­சா­லை­க­ளில் அறி­மு­கப்­ப­டுத்­தி­யி­ருந்­தார்.

இவை மட்­டு­மல்ல கடந்த அர­சோடு இருந்த எமது இனத்­தின் புல்­லு­ரு­வி­க­ளும் சிங்­கள அரசு விரும்­பி­யது போன்று கிளி­நொச்சி மண்­ணின் வர­லாற்றை மாற்றி எமது இனத்­துக்கு பெரும் துரோ­கம் இழைத்­தி­ருக்­கி­றார்­கள்.

எமது அர­சி­யல்த்­து­றைப் பொறுப்­பா­ளர் பிரி­கே­டி­யர் தமிழ்ச்­செல்­வன் சமர்க்­கள நாய­கன் பிரி­கே­டி­யர் பால்­ராஜ் இன்­னும் எத்­த­னையோ சமர்க்­கள நாய­கர்­களை வைத்து அஞ்­சலி செய்த கூட்­டு­ற­வா­ளர் மண்­ட­பத்தை மகிந்த ராஜ­பக்­ச­வின் புதல்­வன் திறந்து வைத்­துள்­ள­தாக நினை­வுக் கல்­லில் குறிப்­பி­டப்­பட்­டி ­ருக்­கி­றது. இவை எல்­லாம் எம் இனத்­தின் புல்­லு­ரு­வி­க­ளின் ஆசிர்­வா­தத்­து­டனே நடை­பெற்­றி­ருக்­கி­றது.

மலை­யக மக்­கள் முன்­ன­ணி­யி­னு­டைய தலை­வர் முன்­னாள் அமைச்­சர் பெரி­ய­சாமி சந்­தி­ர­சே­க­ரன் நிதி ஒதுக்­கீட்­டில் கட்­டப்­பட்ட மத்­திய கல்­லூ­ரி­யின் பிர­தான மண்­ட­பம் தமது தேவைக்கு ஏற்­ற­வாறு தங்­க­ளால் திறந்து வைக்­கப்­பட்­டது என நினை­வுக்­கல்­லில் பெயர்­களை செதுக்­கி­யி­ருக்­கி­றார்­கள். இவை எல்­லாம் எமது அடுத்த தலை­மு­றைக்கு எமது வர­லாற்றை தெரி­ய­வி­டாது தடுக்­க­வேண்­டும் என்­கின்ற நோக்­கம் இருக்­கி­றது.

எமது மண்­ணில் இருந்து ஆன்­மிக சமூ­கப்­ப­ணி­கள் செய்த பெரி­யார்­க­ளின் சிலை­களை திறந்து வைப்­ப­தோடு இல்­லா­மல் எமது மண்­ணின் சரி­யான வர­லா­று­களை எமது அடுத்த சந்­த­திக்­கும் கடத்­தும் வகை­யில் எமது செயற்­பா­டு­கள் அமை­ய­வேண்­டும் – – என்­றார்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிறி­த­ர­னின் பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிதி ஒதுக்­கீட்­டில் மூன்று உரு­வச்­சி­லை­க­ளும் அமைக்­கப்­பட்­டன.

கரைச்­சிப் பிர­தே­ச­சi­பி­யின் தவி­சா­ளர் வேழ­மா­லி­கி­தன் தலை­மை­யில் இடம்­பெற்ற நிகழ்­வில் வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளான த.குரு­கு­ல­ராஜா, சு.பசு­ப­திப்­பிள்ளை, ப.அரி­ய­ரத்­தி­னம், கரைச்­சிப் பிர­தேச சபை­யின் உறுப்­பி­னர்­கள் கரைச்­சிப் பிர­தேச செய­லக உத­வித்­திட்­ட­மி­டல் பணிப்­பா­ளர் அமல்­ராஜ் பிர­தே­ச­ சபையின் செய­லர் கம்­ச­நா­தன் பிர­தேச சபை­யின் உத்­தி­யோ­கத்­தர்­கள் பொது­மக்­கள் எனப்­ப­ல­ரும் கலந்து கொண்­ட­னர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top