Canada

எரியும் காரிற்குள் மனித உடல்?

ரொறொன்ரோ-ஞாயிற்றுகிழமை பிற்பகல் 6.51மணியளவில் கார் ஒன்று முழுமையாக தீயில் மூழ்கியுள்ளதாக பொலிசாருக்கு தகவல் சென்றது. டிக்சி மற்றும் லேக்க்ஷோர் வீதி கிழக்கில் நடந்ததென பீல் பிராந்திய பொலிசார் தெரிவித்தனர்.

தகவல் கேட்டு சம்பவ இடத்திற்கு முதலில் சென்றவர்கள் தீயை அணைத்த பின்னர் வாகனத்திற்குள் உடல் ஒன்று இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். மிசிசாகாவில் எரிந்த காரிற்குள் இருந்து மனித உடல் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து மனிதன் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

27-வயதுடைய Ainar Gancthev மரணத்துடன் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவராவார். பாதிக்கப்பட்டவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top