கார் பந்தயம் ஒன்றின்போது ஏற்பட்ட தீ விபத்திலிருந்து தனது மகனை ஒரு ஹீரோ தந்தை துணிச்சலாக காப்பாற்றும் மெய்சிலிர்க்கச் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. விர்ஜினியாவின் South Boston Speedwayஇல் நடைபெற்ற கார் பந்தயத்தின்போது Mike Jones என்னும் வீரரின் கார் கட்டுப்பாட்டை இழந்து இன்னொரு கார் மீது மோதியது. சுற்றிச் சுழன்ற காரின் பானட்டிலிருந்து குபீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
கார் பந்தயத்தை பார்த்துக் கொண்டிருந்த Mike Jonesஇன் தந்தையான Dean Jones சற்றும் யோசிக்காமல் தாவிக் குதித்து ஓடி காரைத் திறந்து தனது மகனை வெளியில் இழுக்கிறார். சுமார் 15 வினாடிகள் தீப்பிழம்பிற்குள் சிக்கித் தவித்த மகனை எந்த தீயணைக்கும் உபகரணங்களுமின்றி மீட்கிறார் Dean Jones. அதோடு நிற்காமல் காரில் பற்றியிருக்கும் தீயையும் அவர் அணைக்க முயல்கிறார்.
வீடியோவில் பதிவாகியுள்ள இந்தக் காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றன. இதில் கொடுமை என்னவென்றால் தனது மகன் மீதுள்ள பாசத்தால் உயிரையும் மதிக்காமல் அவரைக் காப்பாற்றிய ஹீரோ தந்தைக்கு கார் பந்தயத்தை ஒழுங்கு செய்து நடத்தும் NASCAR என்னும் அமைப்பு கடுமையான தண்டனை விதிக்க இருப்பதுதான்.