Canada

ஒன்ராரியோ அரசின் புதிய அமைச்சரவை எவ்வாறு அமையும்?

எதிர்வரும் யூன் 29ஆம் நாள் வெள்ளிக்கிழமை ஒன்ராரியோவின் புதிய அரசு டக் போட் தலைமையில் பதவியேற்கிறது. அவர் 26வது ஒன்ராரியோ முதல்வராக பதவியேற்கும் அதேவேளை அவரது புதிய அமைச்சரவையும் பதவியேற்கிறது. அதில் இடம்பெறப்போபவர்கள் யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

கடந்த லிபரல் அரசில் அமைச்சரவை 28 முதல் 30 வரை அமைந்திருந்தது. ஆனால் டக் போட் அமைச்சரவையில் அது 18 முதல் அதிகபட்சம் 20 வரையிலேயே அமையும் வாய்ப்பு. பழையவர்கள் 28 பேரும் புதியவர்கள் 48 பேரையும் கொண்ட கன்சவேட்டிக் கட்சியின் 76 பாராளுமன்ற உறுப்பினர்களில் இருந்து அவர்கள் தெரிவு செய்யப்பட்டாக வேண்டும்.

இதில் பிராந்தியம் வயது பால் இனப்பிரதிநிதித்துவம் துறைசார்அனுபவம் மற்றும் நெருங்கிய தோழமை என பலவிடயங்கள் கருத்தில் கொள்ளப்படவேண்டியுள்ளன. இவர்களை தெரிவு செய்வதற்கு உதவியாக முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழருக்கு நன்கு அறிமுகமானவருமான ஜோன் பெயட் தொழிற்படுகிறார்.

அமைச்சரவையில் குறைந்தபட்சம் 40 சதவீத பெண்களை எதிர்பார்க்கலாம். அதில் முதன்மையானவர்களாக கிரிஸ் ரீன் எலியட் கரலைன் மல்ரூனி மற்றும் லீசா மக்லட் அமைவர் என எதிர்பார்கிறேன். இ;ம்முறை தெரிவு செய்யப்பட்ட 124 உறுப்பினர்களில் 49 பேர் பெண்களாகும்.

இதில் கனடாவிலேயே அதிகரித்த வீதமாகும். 39.5 சமவீதம் அடுத்து பிரிட்டிஸ் கொலம்பியா 38.5 சதவீதத்தில் உள்ளது. 49 பேரில் 20 பேர் என்டிபி கட்சியை சேர்ந்தவர்கள் அதாவது அக்கட்சி உறுப்பினர்களில் 50 சதவீதம் அடுத்து 27 பேர் கன்சவேட்டிவ் உறுப்பினர்கள் அக்கட்சி உறுப்பினர்களில் 33 சதவீதம்.

டக் போட்டுக்கு என்றும் தோள்கொடுத்த ரோமன் சோ மற்றும் அடுத்து ஆதரித்த ரோபி பேனட் தோள்கொடுத்தான் தோழன் என்றமைக்காக அமைச்சராகலாம். அதேவேளை தலைமைப்பதவிக்கு எதிர்காலத்தில் சவாலாக அமையலாம் என்ற வகையில் ரொட் பிலிப்ஸ் முதன்மை அமைச்சர் பதவிகளில் இருந்து சற்று பின்தள்ளப்படலாம்.
ஆகையால் நிதி அமைச்சர் பதவி பீற்றரை சென்றடையலாம். கிரிஸ் ரீன் சுகாதாரத்தையும் கரைலைன் உயர் கல்விளையும் கையாளும் வாய்ப்புக்கள் அதிகம்.
.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top