ஒரு வயது குழந்தையை கொதிக்கும் நீரில் போட்டு கொலை செய்த தாய்க்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம் ..

அமெரிக்காவில் 1 வயது குழந்தையை கொதிக்கும் நீரில் போட்டதால், குழந்தையின் உடல் நீரில் வெந்து பரிதாபமாக இறந்துபோனது. இப்படி ஒரு மோசமான செயலை செய்த தாய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Christina Hurt(35) என்ற தாய், தனது ஒரு வயது குழந்தையை கொதிக்கும் நீரில் போட்டுள்ளார். இதில் உடல்வெந்துபோன குழந்தை பரிதாபமாக இறந்துபோனது. Christina இந்த குழந்தையை மட்டுமின்றி, தனது ஏனைய குழந்தைகளையும் இதுபோன்று கொதிக்கும் நீரில் போட்டுவிட்டு, அது தற்செயலாக நடந்தது என கூறியுள்ளார்.< ஆனால், இக்குழந்தை இறந்துபோனதால் இது ஒரு கொலை முயற்சி என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பச்சிளம் குழந்தையை இப்படி மோசமாக கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.