ஒரே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் சுட்டு கொலை :18 மாத குழந்தை கவலைக்கிடம் !!

அர்ஜென்டினா வில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை நான்கு பேர் கும்பலாக சேர்ந்து துப்பாக்கியால் சுட்டு கொன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 16 வயது இளம்பெண், இரண்டு பெண்மணிகள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் இறந்துள்ளனர். இக்குடும்பத்தின் 18மாத குழந்தை உயிருக்கு போராடி வருகிறது. பொலிஸார் இந்த சம்பவத்தை இரு வேறு குழுக்களுக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கும்பலாக நடத்தப்பட்ட குடும்ப படுகொலை என்று கூறுகின்றனர்.
Buenos Aires எனும் இடத்திற்கு பலியானவர்கள் குடும்பம் ஒன்றாக சென்றிருந்தனர். அப்போதுதான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. போதை பொருள் கடத்தல் விடயமாக பழிவாங்குவதற்காக செய்யப்பட்ட படுகொலையாக இதனை காவல்துறையினர் கணிக்கின்றனர். இறந்தவர்கள் விவரம் வருமாறு Danila Evelyn Gimenez, 26,இவரது சகோதரி Carla Gianella Cisneros, 16,இவரது அண்ணன் Nahuel Alejandro Cisneros, alias ‘Francis’, 20, மற்றும் அண்ணனின் தோழி , Daniela Eliana Figueroa, 22 என்பதாகும்.
இதில் இரு பெண்கள் முகத்தில் சுடப்பட்டு கொடூரமாக இறந்திருந்தனர். போலீசார் கூறுகையில் குறைந்தது 30 முறையாவது துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர். அக்கம்பக்கத்தினர் இந்த கொடூர சம்பவம் பற்றி கூறுகையில் இரண்டு நபர்கள் வீட்டிற்குள் சுட்ட சத்தமும் அவர்கள் அங்குள்ள பொருட்களை சேதப்படுத்திய சத்தமும் கேட்டதாக கூறினர்.
மேலும் இரண்டு பேர் காருக்குள் அமர்ந்திருந்ததாகவும் கூறினார். சுட்ட பின்பு அனைவரும் அதே காரில் தப்பி சென்றதாகவும் கூறினார்கள். குற்றவாளிகளை பிடிப்பதற்காக மேலும் விசாரணை தொடர்வதாக அர்ஜென்டினா போலீசார் தெரிவித்தனர்.