ஓடி ஒளியாமல் விவாதத்துக்கு வர வேண்டும்! – மகிந்தவிடம் மீண்டும் மங்கள சவால்

தப்பியோடாமல் விவாதத்திற்கு வருமாறு மஹிந்த ராஜபக்ஷவிடம், நிதி அமைச்சர் மங்கள சமரவீர சபையில் இன்று சவால் விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று நிதி அமைச்சின் மது வரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்கள் மீதான விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“ மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களின் கவனத்தை திசைதிருப்ப முனையக் கூடாது. பொய் கூறி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதனை நிறுத்த வேண்டும். வரி விவகாரம் உட்பட பொருளாதார செயற்பாடுகள் தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சரான மஹிந்த ராஜபக்ஷவுடன் விவாதத்திற்கு தயாராக உள்ளேன். ஆகவே மஹிந்த ராஜபக்ஷ தப்பியோடாமல் விவாதத்திற்கு வரவேண்டும்.” என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.