Business

கனடாவில் கஞ்சாவுக்கு சட்டப்பூர்வ அனுமதி: நாடாளுமன்றம் ஒப்புதல்…

கனடாவில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக விற்பனை செய்ய அனுமதி அளிக்கும் மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2001ம் ஆண்டிலிருந்தே மருத்துவத்துக்காக கனடாவில் கஞ்சாவை பயன்படுத்துவதற்கு அனுமதி உள்ளது.

போதைக்காக பயன்படுத்த தடை இருந்தாலும் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டில் கஞ்சாவுக்கு சட்டபூர்வ அனுமதி வழங்கப்படும் என தற்போதைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ வாக்குறுதி அளித்திருந்தார்.

இதன்படி அதன்படி, 18 வயதுக்குள்பட்டவர்கள் 30 கிராம் வரை கஞ்சா வைத்திருப்பதற்கு அனுமதி அளிப்பதற்கான திருத்தத்தை கஞ்சா தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்வதற்கான மசோதா, நாடாளுமன்ற கீழவையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து மேலவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது, இந்நிலையில் சில திருத்தங்களுடன் யூலை 1ம் திகதி சட்டமாக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம், ஜி7 நாடுகளிலேயே முதல் முறையாக கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும், வாங்கிப் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கும் முதல் நாடாக கனடா மாறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

To Top