Canada

கனடாவில் கிடைக்காத புற்று நோய் சிகிச்சைக்காக ஜேரமனி செல்லும் நோயாளிகள்.

மார்பக அறுவை சிகிச்சை மற்றும் மோசமான கதிர்வீச்சு சுற்றுக்கள் மற்றும் கீமொதெரபி போன்ற சிகிச்சைகளிற்கு உட்பட்ட நார்டா ஹன்ட் என்பவருக்கு இவரது மார்பக புற்று நோய் கல்லீரலிற்கும் பரவி விட்டதென தெரிவிக்கப்பட்டது. இவரது வயிறு மிகவும் பெரிதாக ஒன்பது மாதங்கள் கர்ப்பினி போன்ற தோற்றம் கொண்டிருந்ததென இவர் தெரிவித்தார். ஐந்து வருட பிழைப்பு விகிதம் கொண்ட மார்பக புற்றுநோய் அதி உயர்வாக 87சதவிகிதமாக உயர்வடைந்து உடலின் பல பாகங்களிற்கும்- கல்லீரல் மற்றும் மூளைக்கும் பரவக்கூடியது. பெரும்பாலும் சிகிச்சை அளிக்க மூடியாத கட்டத்தை அடையும்.

இவருக்கும் சாப்பிட தண்ணீர் கூட குடிக்க முடியாத நிலை. நடக்க முடியாது. நாலாவது நிலை புற்று நோயால் பாதிக்கப்பட்டார். தனது பிள்ளைகளிற்காக உயிர்வாழ வேண்டும் என்ற திடம் கொண்ட ஹன்ட ஜேர்மனியில் இதற்கான சிகிச்சை வழங்கப்படுகின்றதென அறிந்தார். உறுதியாக நின்ற ஹன்ட் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் 200,000டொலர்கள் சேகரித்த கொலிங்வூட் ஒன்ராறியோவை சேர்ந்த இவர் ஜேர்மனி சென்று 2017-செப்ரம்பர் மாதம் பல சுற்றுக்கள் கீமோதெரபி பெற்றுள்ளார்.

கிட்டத்தட்ட உடனடியாக இவரது கட்டி கணிசமாக சுருங்கி விட்டது. கல்லீரலில் மட்டும் மிக சிறிதளவு எஞ்சி இருந்ததாக தெரிவித்தார். கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின்னர் தனது செயற்பாடுகள் அனைத்தையும்-சைக்கிள் ஓட்டுதல் உட்பட- தன்னால் செய்ய முடிகின்றதென ஹன்ட் தெரிவித்துள்ளார். மார்பக புற்று நோய்க்கான-ஹீமோதெரபி அல்லது உயிரணு தேக்கம்-இரத்த குழாய்கள் ஊடாக செலுத்தப்படும் முறையானது ஒன்ராறியோவில் ஆதரிக்கப்பட மாட்டாதென ரொறொன்ரோ சணிபுறூக் சுகாதார அறிவியல் மையம் தெரிவிக்கின்றது.

Burghausen ஜேர்மனியில் உள்ள அழகிய பபேரியன் ரவுனில் அமைந்துள்ள கிளினிக்கை சேர்ந்த மருத்துவ இயக்குநர் Dr. Karl R. Aigner-ஹன்டிற்கு அளிக்கப்பட்ட குறிப்பிட்ட சிகிச்சை ஹன்ட் போன்றவர்களை குணப்படுத்தவதற்காக அல்ல அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக என தெரிவித்துள்ளார். நல்ல தரமான வாழ்க்கையை எம்மால் நீடிக்க முடியுமானால் விரும்பியதை நாங்கள் அடைந்தால் அது எமது நோக்கமாக இருக்கின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் ஒன்ராறியோவை சேர்ந்த Sophia Mavrokefalos குறிப்பிட்ட சிகிச்சை மூலம் தான் குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

240,000டொலர்கள் தனது சிகிச்சைக்கு செலவழிந்ததாக தெரிவித்த இவர் இருப்பினும் மதிப்புள்ளதென கூறியுள்ளார். வருடந்தோறும் கனடாவில் 5,000ற்கும் மேற்பட்டவர்கள் இறக்கின்றனர். பெரும்பாலானவர்கள் மேற்குறிப்பிட்டது போன்ற சிகிச்சை பெறுவதற்கான நிதிவளம் அற்றவர்கள் என கூறப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top