Canada

கனடாவில் தீப்பிடித்து எரிந்த வீட்டில் சடலமாக கிடந்த பெண் வழக்கில் திடீர் திருப்பம்!

கனடாவில் தீப்பிடித்து எரிந்த வீட்டில் சடலமாக கிடந்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒன்றாறியோவின் Mariposa Township நகராட்சியில் உள்ள வீட்டில் கடந்த செவ்வாய்கிழமை திடீரென தீப்பிடித்தது.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் வீட்டுக்குளே இருந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றினார்கள். விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் ஹீலி பலங்கா (35) என தெரியவந்தது.

இது விபத்தால் ஏற்பட்ட மரணம் என பொலிசார் முதலில் கூறிய நிலையில் தற்போது இது ஒரு கொலை என அவர்கள் நினைக்கிறார்கள். இதையடுத்து இது கொலை வழக்காக தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. இறந்த பெண் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் கூறலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top