Canada

கனடாவில் தீப்பிடித்த பேரூந்திலிருந்து 16 மாணவர்களை காப்பாற்றிய சாரதி!

கனடா-சஸ்கற்சுவான், பிரின்ஸ் எட்வேட் ஐலன்டை சேர்ந்து சாரதி ஒருவர் அவரது விரைவான சிந்தனையால் தனது பேரூந்தில் பயணித்த 16 மாணவர்களின் உயிர்களை காப்பாற்றி அனைவராலும் பாரட்டப்பட்டார்.

பேரூந்து தீப்பற்றி எரிவதற்கு முன்னர் அனைத்து மாணவர்களும் காப்பாற்றப்பட்டுவிட்டனர். வெள்ளிக்கிழமை காலை பாடசாலைக்கு செல்லும் வழியில் பேரூந்தில் இருந்து ஒரு வகையான அசாதாரண மணம் வருவதை மார்க் ஜென்கின்ஸ் அறிந்துள்ளார்.

ஏதோ சரியில்லை என அறிந்து கொண்ட இவர் உடனடியாக பேரூந்தை நிறுத்திவிட்டு இரு உயர்தர பாடசாலை மாணவர்களின் உதவியுடன் பேரூந்தில் இருந்த அனைத்து மாணவர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டார்.

எண்ணை எரிவது போன்ற மணம் வந்ததே சாரதியை சந்தேகப்பட வைத்தது. வாகன முகட்டின் கீழ் இருந்து புகை வரத்தொடங்கியது. இச்சந்தர்ப்பத்தில் இவர் மாணவர்களை வெளியேற்ற தொடங்கிவிட்டார்.

இவரின் இச்செயலிற்காக பிரின்ஸ் எட்வேட் ஐலன்ட் தீயணைப்பு பிரிவு இவரின் பாராட்டியதுடன் பெருமை பட்டும் கொண்டனர். தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்தடைந்த சமயம் பேரூந்து முற்றாக எரிந்து விட்டதாக கூறப்பட்டது.

தீப்பிடிக்க இயந்திர பிரச்சனை காரணம் என என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளியேற்றப்பட்ட மாணவர்கள் வேறொரு பேரூந்தில் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top