கனடாவில் பூட்டிய காரில் பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!!

கனடாவில் மூன்று வயது குழந்தை காரில் உயிரிழந்து கிடந்த நிலையில் அவர் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். ஒன்றாறியோவின் புர்லிங்டன் நகரை சேர்ந்தவர் ஷான் பெனில் (37) கடந்த 23-ஆம் திகதி காரில் தனது 3 வயது ஆண் குழந்தையை தனியாக விட்டு விட்டு வெளியில் சென்றுள்ளார்.
குழந்தை கார் உள்ளே மூச்சு பேச்சின்றி இருப்பதை பார்த்த அருகிலிருந்த நபர் இது குறித்து அவசர உதவி குழுவுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையை மீட்ட குழுவினர் அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.
கார் உள்ளே இருந்த அதிக சூடு காரணமாக குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. இது சம்மந்தமாக குழந்தையின் தந்தை ஷான் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்தார்கள். தற்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் ஷான் மீதான நீதிமன்ற விசாரணை அடுத்த மாதம் 27-ஆம் திகதி நடைபெறவுள்ளது.