Canada

கனடாவில் மின்னல் தாக்கி ஐவர் காயம்!

ஒன்ராறியோ-கோர்ட்லான்ட் என்ற இடத்தில் ஐந்து பேர்கள்-வயதானவர்கள் மூவர் மற்றும் பிள்ளைகள் இரண்டு மற்றும் குடும்ப நாய்-சிறு காயங்களுடன். அனைவரும் ஒன்ராறியோவின் தென்பகுதியில் திங்கள்கிழமை மின்னலால் தாக்கப்பட்டுள்ளனர்.

வூட்ஸ்ரொக்கிலிருந்து 35-கிலோ மீற்றர்கள் தொலைவில் பிற்பகல் 3.45 மணியளவில் இவர்கள் தாக்கப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். பெரிய மேப்பிள் மரங்கள் இரண்டின் கீழ் இவர்கள் நின்று கொண்டிருக்கையில் மின்னலால் தாக்கப்பட்டதாக பொலிசாரின் கூற்றுபிரகாரம் தெரியவருகின்றது.

ஐவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இப்பகுதிக்கு கடுமையான புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கனடா சுற்று சூழல் அறிவித்திருந்ததாக கூறப்படுகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top