Canada

கனடாவில் மூடப்படும் 113 வருட பழமையான தேவாலயம்.

கனடாவிலுள்ள 113 வருட பழமையான தேவாலயம் ஒன்று இம்மாத இறுதியில் மூடப்படவுள்ளது.1981 வாக்கில் சராசரியாக 145, 150 பேர் ஆராதனைகளில் பங்கு பெறுவதோடு பாடகர் குழுவில் 40 முதல் 50 பேர் வரை இடம்பெற்றிருப்பதுண்டு என்று கூறும் போர்டு உறுப்பினர்களின் தலைவரான Kenneth Holmes, தற்போது அந்த எண்ணிக்கை 20 முதல் 25 உறுப்பினர்களாகவும் 11பேர் கொண்ட பாடகர் குழுவாகவும் குறைந்துவிட்டதாகத் தெரிவிக்கிறார்.

இதனாலும் ஆலயத்தை நிர்வகிப்பதற்கான வருவாயும் பெரிய அளவில் குறைந்துவிட்டது. ஆலயத்தின் கூரையில் ஏற்பட்ட பழுது ஒன்றின் காரணமாக சில வருடங்கள் முன்பே அதை விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும், அத்திட்டம் சரியாக போகாததால் அதற்குப்பின் பல வருடங்களாக கஷ்டமான சூழலே தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த ஆலயத்திற்கு வருகை தரும் மக்கள் மிகவும் இனிமையானவர்கள் என்றும் ஒருவருக்கொருவர் உதவும் குணம் உடையவர்கள் என்றும் கூறும் அவர் அருமையான இடம் அது என்கிறார்.ஆலயத்தை வாங்க இருக்கும் நபரும் அந்த இடத்தை ஆராதனைக்கான இடமாகவே வைத்திருக்கப்போவதாக தெரிய வந்தாலும் முன்பு அந்த ஆலயத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் மீண்டும் அங்கு வரப்போவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.

எல்லோரும் வெவ்வேறு ஆலயங்களுக்கு செல்ல இருப்பதாகக் கூறும் அவர், அவரவர் தங்களுக்கு அருகிலுள்ள ஆலயங்களுக்கு செல்ல இருப்பதாக தெரிவிக்கிறார்.
எப்படியும் 113 வருட பழமையான அந்த ஆலயம் மூடப்படுவது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் உண்மை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top