கனடாவில் வார இறுதியில் வெப்பமான காலநிலை: வானிலை மையம் .

கனடாவில் எதிர்வரும் வார இறுதி நாட்களில் வெப்பமான காலநிலை அதிகமாக காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் சுற்றுசூழல் கனடா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, GTA-வில் உள்ள வெப்பநிலையானது வார இறுதியில் தீவிர நிலைகளாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையிலிருந்து திங்கள் வரை வெப்பநிலை பகலில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அந்தவகையில் வெள்ளிக்கிழமை 31 C ஆகவும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 36 C ஆகவும் இருக்கும் என குறிப்பிப்பட்டுள்ளது. இரவில் வெப்பம் சிறிய அளவில் குறைந்து 20 களில் வந்து நிற்கலாம் எனவும், இது கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு மிகவும் குறிப்பிடத்தக்க வெப்ப நிகழ்வாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சமயத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள், வெளியில் அலைந்து வேலை செய்பவர்கள் ஆகியோர் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.