கனடாவில் 61 வயது முதியவருக்கு 24 மனைவிகள், 149 குழந்தைகள்!

கனடாவில் பலதார திருமணம் செய்து கொண்ட இரண்டு நபர்களை வீட்டுக்காவலில் வைக்க British Colombia உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Winston Blackmore என்ற 61 வயதுடைய நபருக்கு 24 மனைவிகள் மற்றும் 149 குழந்தைகள் உள்ளனர்.
பலதார(polygamy) திருமண முறையை விரும்பிய Winston இயேசு கிறிஸ்துவின் அடிப்படைவாத தேவாலயத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் திருமணம் செய்துகொண்ட பெண்களில் பல பெண்கள் 15 வயதுடையவர்கள் ஆவார். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் இவரை 6 மாதம் வீட்டுக்காவலில் வைக்க நீதமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணி மற்றும் மருத்துவம் ஆகிய இரண்டிற்கு மட்டும் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று, கனடாவில் James Oler என்ற நபர் 5 பெண்களை திருமணம் செய்து கொண்ட குற்றத்திற்காக 3 மாதம் வீட்டுக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கனடிய வரலாற்றில் இதுவரை 1899 மற்றும் 1906 ஆகிய ஆண்டுகளில் பலதார திருமணம் செய்து கொண்ட ஆண்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பலதார திருமணம் செய்துகொள்பவர்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது.