கனடா நாட்டவர்களுக்கு ஆதரவாகத்தான் எப்போதும் நிற்பேன்: ஜஸ்டின் ட்ரூடோ !

செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா நாட்டவர்களுக்கு ஆதரவாக எப்போதும் நிற்பேன் என்று கூறினார்.
G7 மாநாட்டிற்கு பிறகு அமெரிக்க அதிபர் டிரம்புடனான உறவில் சிறிது தொய்வு ஏற்பட்ட நிலையில், நீங்கள் அவருடன் அதற்கு பின் தனிப்பட்ட முறையில் பேசினீர்களா? என்று
ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேட்டபோது, அமெரிக்க அதிபர் டிரம்புடன் அதற்கு பிறகு நான் பேசவில்லை என்று தெரிவித்தார்.
என்றாலும் G7 உறுப்பினர்கள் தொடர்ந்து ஒருவரையொருவர் தொடர்பு கொள்வதை உறுதி செய்து கொள்ள இருப்பதாகவும், தொடர்ந்து பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ள
இருப்பதாகவும் தெரிவித்த கனடா பிரதமர், Brusselsஇல் அடுத்து நடைபெற இருக்கும் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபரை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவருடன் ஒரு ஆக்கப்பூர்வமான உறவைத் தொடர விரும்புவதாகவும், அதே நேரத்தில் அந்த உறவு கனடா நாட்டவர்கள் தன்னிடம் எதிர்பார்க்கும் விதமாகவே இருக்கும் என்றும்
ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
கனடா நாட்டு மக்களின் விருப்பம் மற்றும் மதிப்புகளை காக்கும் வகையிலேயே தனது உறவு இருக்கும் என்று தெரிவித்த அவர் கனடா நாட்டவர்களுக்கு நன்மை ஏற்படும்
வகையிலான உறவுகளையே தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அடுத்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர் ஒருவர், அமெரிக்க அதிபர் உங்களை தனிப்பட்ட முறையில் தாக்கியது உங்களை அதிர்ச்சியடையச் செய்ததா என்று கேட்டார்.
அரசியல்வாதிகள் என்றாலே இத்தகைய தாக்குதல்களை தாங்கும் குணம் படைத்தவர்கள்தான் என்று கூறிய ஜஸ்டின் பொதுக்கருத்தை எட்டும் முயற்சியில் கவனம் செலுத்துவோமே
தவிர தனிப்பட்ட கருத்துகளுக்கு ரியாக்ட் செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.