கனடா-நியு பிறவுன்ஸ்விக்கில் கார் ஒன்று வெடித்து தீப்பற்றிய விபத்து?

கனடா-நியு பிறவுன்ஸ்விக்கில் கார் ஒன்று வெடித்து தீப்பற்றியுள்ளது. பாத்றஸ்ட் என்ற இடத்தில் மேம்பாலம் ஒன்றின் கீழ் கான்கிரீட் தூண் ஒன்றுடன் கார் மோதியதால் வெடித்து சிதறியுள்ளது. இந்த மோதல் சம்பந்தமான அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் எவரும் உயிர் பிழைக்கவில்லை என சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.
காரிற்குள் எத்தனை பேர்கள் இருந்தனரென்பதும்; தெரியவரவில்லை. வீதி பூராகவும் புகை மண்டலத்தால் சூழப்பட்டு காணப்பட்டது. நீண் ட நேரமாக வீதி மூடப்பட்டிருந்தது