கனடா வருமானவரி மோசடியில் புதிய திருப்பம்!

கனடா இறைவரி ஏஜன்சி மோசடியில் புதிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வன்கூவர் பொலிசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பொது மக்களை எச்சரித்த பொலிசார் குறிப்பிட்ட சூழ்ச்சியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தும் உள்ளனர்.
58-வயதுடைய பெண் ஒருவருக்கு புதன்கிழமை பிற்பகல் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. இப்பெண் 6,000டொலர்கள் வரிப்பணம் செலுத்த தவறிவிட்டதாக தெரிவித்ததுடன் அதற்காக கைது செய்ய உத்தரவும் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது.
மீண்டும் அப்பெண்ணுடன் தொடர்பு கொள்ளப்பட்டு ஆர்சிஎம்பி என தெரிவித்து பெண்ணின் தனிப்பட்ட தகவல் மற்றும் இருப்பிடத்தை தெரியப்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
பெண்ணின் வாசலில் துப்பாக்கிகளுடன் ஆர்சிஎம்பியனர் போல் ஆடைகள் அணிந்தவாறு பெண்ணை கைவிலங்கிட்டு பழைய மாடல் செடான் வாகனத்தின் பின் இருக்கையில் அமர செய்து அழைத்துச் செல்லப்பட்டார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் சரே என்ற இடத்தில் பிட்கொயின் மெசின் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்று பணத்தை வைப்பு செய்துவிட்டு பாதிக்கப்பட்ட பெண்ணை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு போலி அதிகாரிகளாக வந்த இரு மனிதர்களும் அகன்று விட்டனர். இத்தகைய சம்பவங்;கள் குறித்து பொலிசார் மக்களை எச்சரித்துள்ளனர்.