Canada

காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக… கனேடிய மண்ணில் கண்ணீருடன் பேரணி !!

நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும், அதற்கு முன்னரும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்படு காணாமலாக்கப்பட்டவர்களும், இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்டவர்களையும் மீட்டுத் தருமாறு வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பல போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் கடந்த 2017 ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் நாளிலிருந்து காணாமல்போனோர் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தில் காணாமல்போனோரின் உறவுகள் போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில், எதிர்வரும் ஆடி மாதத்தின் முற்பகுதியில் 500வது நாளை எட்ட இருக்கின்றனர்.

இதனை உலகிற்கு உணர்த்தும் விதமாகவும், இலங்கை அரசுக்கு உரைக்கும் விதமாகவும் எடுத்துரைக்க வருகின்ற ஜூன் 30 அன்று சனிக்கிழமை கனடாவில் நாதன் பிலிப்ஸ் சதுக்கம், ரொறன்ரோ, ஒன்ராறியோவில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கும் வகையில் பேரணி நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிக்கை நிகழ்வு ஏற்பாட்டாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top