கால்பந்து விளையாட்டின் போது திடீரென துப்பாக்கி சூடு: பாதிக்கப்பட்ட 5 பேரில் ஒருவர் கர்ப்பிணி பெண்.

அமெரிக்காவின் டெக்சாஸிற்கு அருகில் இருக்கும் டல்லாஸ் நகரில் கால்பந்து போட்டிக்கு நடுவே திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் ஐந்து பேர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்திருக்கிறது. அவர்களில் ஒருவர் கர்ப்பிணி என்பதால் அவருக்கு அவசரமாக அறுவை சிகிச்சை நடத்தப்பட்டிருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று காலை 9.30 மணியளவில் ஜூனைடா கைவினை பொருட்கள் மைதானத்தில் மேற்கூறிய சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் நடந்த உடன் அவசரமாக வந்த பொலிஸ் அங்குள்ளோரை அப்புறப்படுத்தியது. காயமடைந்தோருக்கு முதலுதவி செய்து மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது. குண்டு பாய்ந்த ஐந்து பேரில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அவசரமாக சி-செக்க்ஷன் முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் குழந்தை நலமாக இருப்பதாகவும் தாயின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கால் பந்தாட்டத்தின் ஒரு சுற்று முடிவடைந்த நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஒரு மிகப்பெரிய குழு ஒன்று கால் பந்தாட்ட மைதானத்தை கடப்பது போலவும் , துப்பாக்கி சத்தம் கேட்டதும் மக்கள் பதறியடித்து உயிரை காப்பாற்றி கொள்ள ஓட தொடங்கியது போலவும் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றின் மூலம் தெரிய வருகிறது. இது குறித்து பத்திரிகையாளர்களுக்கு பொலிஸ் பதிலளிக்கவில்லை. இன்னமும் சந்தேகிக்கப்படும் நபர் யாரையும் கைது செய்யவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.